"நேற்றிரவு முதல், ஜனாதிபதி ராஜபக்சவின் வெளியிடப்பட்ட பேஸ்புக் பதிவுகளில் பயனர்கள் கருத்துக்களை தெரிவிக்க முடியவில்லை.
கடந்த 26 ஜனவரி 2010 முதல் எம்.பி.க்கள், பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளின் பேஸ்புக் கணக்குகளை நான் ஆய்வு செய்தேன். இதற்கு முன் யாரும் அவர்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளில் கருத்துகளை தெரிவிக்கும் பக்கத்தை கட்டுப்படுத்தவில்லை.
ஆபத்தான தள்ளுமுள்ளு மற்றும் அதிகரித்து வரும் கோபத்தைப் பிரதிபலிக்கும் பொதுக் கருத்துக்களை வெளியிட அனுமதிக்காத இலங்கையின் முதல் அரசியல்வாதி எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆவார்."
இவ்வாறு சமூக ஊடக நிபுணர் டாக்டர். சஞ்சன ஹட்டொடுவ ட்வீட் செய்துள்ளார். (யாழ் நியூஸ்)