அத்தியாவசியப் பகுதிகளுக்கு தடையின்றி மின்சார விநியோகத்தை வழங்குமாறும், இதற்காக தொடர்ச்சியான செயற்பாட்டு அறையை அமைக்குமாறும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு, இலங்கை மின்சார சபை, நிலையான எரிசக்தி ஆணையம், நீர்ப்பாசன அமைச்சு, கைத்தொழில் அமைச்சு, முதலீட்டு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியன இதில் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உரிய திணைக்களங்களுக்கு இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
மேலும் நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தடையில்லா மின்சாரம் வழங்குவது கடினமாக இருந்தாலும், அத்தியாவசிய மருத்துவமனைகள், பாதுகாப்பு மையங்கள், முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களுக்கு தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவுக்கு அறிவுறுத்தி இவை முதலியன பேணப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார். (யாழ் நியூஸ்)