சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்க லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1359 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் புதிய விலை ரூ. 4,199 ஆகவுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 12.5 கிலோ ஒன்றின் விலை ரூ.1,856 இல் இருந்து 2,840 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது ரூ. 4,199 ஆக அதிகரித்துள்ளது.
5 கிலோ எடை கொண்ட லாஃப்ஸ் காஸ் சிலிண்டரின் விலை 544 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் புதிய விலையும் அதிகரித்து ரூ. 1680 ஆக காணப்படுகின்றது.
லாஃப்ஸ் எரிவாயு இந்த அதிகரிப்பு குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் இதுவரை வெளியிடவில்லை ஆனால் லாஃப்ஸ் எரிவாயு முகவர்கள் விலை அதிகரிப்பை உறுதிப்படுத்தியுள்ளனர். (யாழ் நியூஸ்)

Laugfs increased LPG prices pic.twitter.com/nw9KCbFSwl
— Ranga Sirilal (@rangaba) March 19, 2022