நுவரெலியாவில் இந்த வருடமும் ஏப்ரல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் என வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ள போதிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
திருவிழாவில் தொடர் கேளிக்கை நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்று கூறிய அவர், அந்த நேரத்தில் அப்பகுதியில் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
நுவரெலியா கிரிக்கட் சங்கத்தினால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்ட நுவரெலியா பிரிமியர் கிரிக்கட் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)