லிட்ரோ சமையல் எரிவாயு விநியோக முகவர்கள் 06 பேரினை லிட்ரோ நிறுவனம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியது.
சமையல் எரிவாயு விநியோக நடவடிக்கைகளின் போது அவர்களால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் மோசடிகளை கருத்தில் கொண்டு இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் செயற்பட்ட 6 முகவர்களே இவ்வாறு இடை நிறுத்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் சாரங்க விஜேசிங்க குறிப்பிட்டார்.
இந்த முகவர்கள் 06 பேரும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை உரிய விலைக்கு மேலதிகமாக கூடிய விலையில் விற்பனை செய்தமை தொடர்பில் ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றதை அடுத்து இவ்வாறு இடை நிறுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், லிட்ரோ சமையல் எரிவாயுவை எவரேனும் கூடிய விலையில் விற்பனை செய்தால், 0112 505 808 எனும் தொலைபேசி இலக்கம் அல்லது 1311 எனும் துரித அழைப்பு இலக்கத்துக்கு அழைத்து தகவல் தருமாறு லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.