ஏறாவூர் தமிழ்ச்சாரல் கலை இலக்கிய வட்டத்தின் தமிழ்ச்சாரல் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடும், பெண் ஆளுமைகளைக் கெளரவிக்கும் நிகழ்வும் ஏறாவூர் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
தமிழ்ச்சாரல் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் எம்.எச். ஜிப்ரியா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ்.நளீம் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில், பதினொரு பெண் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய தமிழ்ச்சாரல் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு செய்யப்பட்டதோடு, ஏறாவூரில் உள்ள பல்துறை சார்ந்த பெண் ஆளுமைகள் அனைவரும் கெளரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்