சிலாபம் - தங்வெல பகுதியில் மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்து விட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று காலை கொஸ்வத்த காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இவர்கள் இருவரின் சடலமும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த பெண் 60 வயதானவர் என்பதுடன், உயிரை மாய்த்துக்கொண்டவர் 65 வயதானவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.