நாட்டின் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வகிக்கும் தகுதி தனக்கு இருப்பதாக கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி அமைச்சு உட்பட இரண்டு அமைச்சுக்களை தான் இதற்கு முன்னர் உருவாக்கியதாக அவர் கூறினார்.
மன்னன் பராக்கிரமபாகு விவசாய அமைச்சரான பிறகு, நாட்டில் நெல் மிகுதியாக இருக்கும் அளவிற்கு விவசாயத்தை நிலைநாட்டியவர் தான் மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.
கைத்தொழில் அமைச்சில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.