உள்நாட்டு பால் மா உற்பத்தி நிறுவனமான பெல்வத்தை நிறுவனம் அதன் பால் மா விலையை அதிகரித்துள்ளது.
அந்த வகையில், 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 105 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதன்படி, 400 கிராம் பெல்வத்தை பால் மா பொதியின் புதிய விலை 625 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இறக்குமதி செய்யப்படும் பால் மக்களின் விலைகளை மேலும் அதிகரிப்பதாக பால் மா இறக்குமதியாளர்கள் நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.