முன்னாள் வலுச்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில சீதாவக்கை பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.
சீதாவக்க பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக என்னை நியமித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என அவரது இராஜினாமாக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எரிசக்தி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், நிறைவேற்றுப் பதவியான மேற்கண்ட பதவியில் நீடிப்பது பொருத்தமற்றது என ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வலுச்சக்தி அமைச்சர் பதவிலியிருந்து பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.