டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான எலோன் மஸ்க், கடந்த வெள்ளிக்கிழமை டிவிட்டரில் சுதந்திரமான சமூக ஊடக தளம் ஒன்றை உருவாக்குவது குறித்து பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.
டிவிட்டரில் அத்தகைய சுதந்திரம் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ள அவர், சுதந்திரமான பேச்சுக் கொள்கையை கடைபிடிக்க தவறுவது என்பது ஜனநாயகத்தின் அடிப்படையை குறைத்து மதிப்பிடுவதற்கு சமமானது எனவும் கூறியுள்ளார்.
எஸ்இசி ஒப்பந்தம் தொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமெரிக்க செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் எஸ்இசி தொடர்பாக எலான் மஸ்க் பதிவிட்ட டிவிட்டுகளை ஆவணமாக எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அராசங்க விசாரணைக்கு இது ஆவணங்கள் உகந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வாதிடும்போது, எலான் மஸ்க்கின் ட்வீட்கள், SEC உடனான அவரது 2018 ஒப்பந்தத்தை நீதிமன்றம் ரத்து செய்தாலும், அரசாங்க விசாரணைக்கு செல்லுபடியாகும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஆனால் எலான் மஸ்கிற்கு இதில் உடன்பாடில்லை. தன்னுடைய டிவிட்டர் பக்கத்தினை எஸ்.இ.சி மேற்பார்வையிடுவதை விரும்பாத அவர், அதனை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை ஆணையம் தன்னுடைய டிவிட்டர் பதிவுகள் தொடர்பான ஆவணங்களை ஆணையம் நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் எலான் மஸ்க் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் டிவிட்டரின் தனியுரிமைக் கொள்கை மீது அதிருப்தி கொண்டிருக்கும் எலான் மஸ்க், புதிய சமூக ஊடகம் குறித்த தன்னுடைய விருப்பத்தை கேள்வியாக பொதுவெளியில் முன்வைத்துள்ளார். (யாழ் நியூஸ்)