இலங்கை மத்திய வங்கியினால் அண்மைக்காலமாக இறையாண்மை பத்திரங்கள் செலுத்தப்பட்டதன் பின்னணியில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று மத்திய வங்கி அரசியல்மயமாகி, பெருமளவு பணம் பறிக்கும் அச்சகமாக மாறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இணைய சேனலுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தாமரை கோபுர நிர்மாணத்தின் போது பாரியளவில் சுரண்டல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)