நாளை என்ன நடக்கும் என்று தெரியவில்லை, இப்போது எனக்கும் அச்சமாக உள்ளது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் சவாலானது, இந்த சூழ்நிலையை நீங்கள் கவனமாக சிந்திக்க வேண்டும்.
அரசாங்கத்தில் இருந்து எம்.பி.க்கள் குழுவொன்று வெளியேறுவதாக பரவி வரும் வதந்தி தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்நிலையில் பிரச்சினையை விட்டுவிடாமல் பேசி தீர்வு காண வேண்டும் என்றார்.
மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் ஆக்ஸிஜன் உற்பத்திப் பிரிவின் திறப்பு விழாவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.