அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தால் நாளை (31) மின்வெட்டு காலத்தை 13 மணிநேரமாக அதிகரிக்குமாறு CEB கோரிக்கை விடுத்துள்ளது, அதனை PUCSL ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F வலயங்களில் அதிகாலை 3.00 மணி முதல் காலை 6.00 மணி வரை 3 மணிநேரம், மதியம் 12.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 4 மணி நேரம் மற்றும் மாலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 6 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
அதேநேரம், G,H,I,J,K,L வலயங்களில் நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகாலை 3.00 மணி வரை 3 மணி நேரமும், காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை 4 மணி நேரம் மற்றும் மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 6 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
அதேநேரம், P,Q,R,S வலயங்களில் அதிகாலை 3.00 மணி முதல் காலை 6.00 மணி வரை 3 மணி நேரமும், மதியம் 12.00 முதல் 4.00 மணி வரை 4 மணி நேரம் மற்றும் மாலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 6 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
அதேநேரம், T,U,V,W வலயங்களில் நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகாலை 3.00 மணி வரை 3 மணி நேரமும், காலை 8.00 மணி மதியம் 12.00 மணி வரை 4 மணி நேரம் மற்றும் மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 6 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
அதேநேரம், M,N,O,X,Y,Z வலயங்களில் அதிகாலை 5.30 முதல் 9.00 மணி வரை 3 மணி 30 நிமிடங்கள் மற்றும் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை 2 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். (யாழ் நியூஸ்)
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளவும். https://chat.whatsapp.com/H57lBYDLpJ5Lq7gmNXcqNU