கடவத்தை பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சம்பவத்தில் மாகொல பகுதியை சேர்ந்த 70 வயதான ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
கடவத்தை காவல்துறை நிலையத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் அவர் காத்திருந்த போது இன்று முற்பகல் மயக்கமுற்ற நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.