நாளை சனிக்கிழமை (26) மின்வெட்டு எவ்வாறு அமுல்படுத்தப்படும் எனும் அட்டவணையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, A முதல் L வரையான வலயங்களில் 5 மணி நேரம் மின்வெட்டு.
காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மூன்று மணி நேரம் 20 நிமிடங்கள் மற்றும் மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை ஒரு மணி நேரம் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
அதேநேரம், P முதல் W வரையான வலயங்களில் 4 மணி 40 நிமிடங்கள் மின்வெட்டு
காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மூன்று மணி நேரம் மற்றும் மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை ஒரு மணி நேரம் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.