நாடு தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதால் அனைவரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிபுன ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தொடக்கம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தியாகங்களை செய்து வருவதாகவும் எனவே நாட்டின் இளைஞர்கள் தியாகம் செய்வதற்கு தயாராக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.