பாடசாலை ரக்பி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பிரிவு III பாடசாலைகளுக்கிடையிலான ஏழு பேர் கொண்ட ரக்பி சுற்றுப்போட்டியில் மடவளை மதீனா தேசிய பாடசாலை அணி இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டது.
பல்லேகல திரித்துவக் கல்லூரி ரக்பி மைதானத்தில் இடம்பெற்ற இச் சுற்றுப்போட்டியில் மத்திய, ஊவ, வட மத்திய மாகாணங்களை சேர்ந்த 24 அணிகள் கலந்து கொண்டன.
இத்தொடரில் இறுதிப் போட்டியில் மடவளை மதீனா தேசிய பாடசாலை மற்றும் குருநாகல் ஸாஹிரா கல்லூரி ஆகிய அணிகள் மோதின.
விறு விறுப்பான இறுதிப்போட்டியின் முடிவில் ஸாஹிரா கல்லூரி மதீனா அணியை வீழ்த்தி சம்பியன் அணியாக தெரிவானது.
-மடவளை நியூஸ்