இலங்கை மத்திய வங்கி டாலரின் மதிப்பை இயற்கையான மிதக்க அனுமதிக்க வேண்டும். புதிய ரூ.230 எனும் செயற்கை மதிப்பானது, கறுப்புச் சந்தையின் ஏராத்தாள தற்போதைய மதிப்பான ரூ.265 குறைந்தபட்சம் ரூ.280 ஆக அதிகரிக்க அனுமதிக்கும் (ஹவாலா முறை). இவை எதிர்வரும் நாட்களில் கண்டிப்பாக இடம்பெறும்.
எனவே இந்த வகையான முதிர்ச்சியற்ற முடிவு, வாழ்க்கைச் செலவைப் பொறுத்தவரையில் பொது மக்களைக் கடுமையாகப் பாதிக்கும்.
இலங்கை மத்திய வங்கி செயற்கையாக டாலர் விகிதத்தை வைத்திருக்கும் கொள்கையானது கறுப்புச் சந்தையின் விகிதத்தை உயர்த்த மட்டுமே உதவுகிறது.
நாட்டில் பொருளாதார வல்லுனர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் நாம் இருப்பது ஐரோப்பாவில் இல்லை இலங்கையில் என்பதை புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர்.
நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக மாஃபியா ஒன்று கட்டமைக்கப்பட்டு உள்ளது. அதை உடைப்பது அரசுக்கு எளிதல்ல.
கறுப்புச் சந்தையில் டாலர் வீதம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிகரித்ததற்கு மத்திய வங்கி தான் முழுப் பொறுப்பு. தற்போதைய கறுப்புச் சந்தை நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக அமைப்பாகும், இது தானாகவே ஒழிய வேண்டும், அதனை முறியடிக்க முடியாது. எனவே அதை வெற்றிபெற அரசு சில உத்திகளை கையாள வேண்டும்.
மேலும் பணமதிப்பு நீக்க முடிவை நான் வரவேற்கிறேன் ஆனால் அவர்கள் செயற்கையாக டாலர் விகிதத்தை கட்டுப்படுத்துவதில் இருந்து முழுமையாக விலகியிருத்தல் அவசியம்.
முஹீத் ஜீரான்
சர்வதேச மனித உரிமை ஆர்வலர்
(யாழ் நியூஸ்)