2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணிச் சட்டத்தின் விதிகளின்படி, பணம் மாற்றுபவர்கள் உரிமம் பெற்ற வங்கிகள் அத்தகைய பணத்தை மாற்றுபவர்களுக்கு வழங்கப்படும் மாற்று விகிதங்களுக்கு மேலதிகமாக அதிக மாற்று விகிதங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு தடை செய்யப்பட்ட ஒன்று என்று பொதுமக்களுக்கு இதன்மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற வங்கிகள் நிர்ணயித்த கட்டணங்களுக்கு அப்பால் ஏதேனும் வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் அவர்களின் உரிமங்கள் இடைநிறுத்தம் / இரத்து செய்யப்படும் என்று பணம் மாற்றுபவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் மாற்றுபவர் எந்தவொரு பரிவர்த்தனைக்கும் அதிக மாற்று விகிதங்களை வழங்கினால், பின்வரும் தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரி மூலம் அந்நிய செலாவணி திணைக்களத்திற்கு தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (யாழ் நியூஸ்)
தொலைபேசி:
0112398523
0112398827
0112477375
0112398568
மின்னஞ்சல்: dfem@cbsl.lk