டீசல் விலையினை மீண்டும் அதிகரிப்பதற்கான சதி நடவடிக்கைகளில் சில தரப்பினர் ஈடுபட்டுள்ளனர் என தொழிற்சங்க தலைவர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
லங்கா ஐஓசி நிறுவனம் தனது அனுமதிப்பத்திரம் தொடர்பான முக்கிய நிபந்தனையை மீறியுள்ளது, ஆனால் அந்த நிறுவனத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
லங்கா ஐஓசிக்கு இலங்கையில் செயற்படுவதற்கான அனுமதி மாத்திரம் உள்ளது. விலைகளை அதிகரிப்பது குறித்த முடிவை பொறுப்பான அமைச்சரே எடுக்கவேண்டும்.
லங்கா ஐஓசிக்கு வழங்கப்பட்ட உரிமப்பத்திரத்தின் முக்கிய நிபந்தனை அது தரமான எரிபொருளை தடையின்றி நியாயமான விலைக்கு வழங்கப்படவேண்டும் என்பதே. ஆனால் இந்த நிபந்தனைகளை அந்த நிறுவனம் மீறியுள்ளது .
எனினும் நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை கொண்டுள்ள அதிகாரிகள் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர். அமைச்சரும் அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காததை பார்க்கும்போது இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனங்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் விலைகளை அதிகரிப்பதற்கான சதி இடம்பெறுகின்றது என நாங்கள் கருதுகின்றோ என்று குறிப்பிட்டுள்ளார்.