நாடாளுமன்ற உணவகத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நெருங்கிய உறவினர்களுக்காக திறக்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு நாடாளுமன்றத்தை பார்வையிட அனுமதியளிக்கப்படுவதோடு மதிய உணவையும் எடுத்து செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவல் காரணமாக நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் பார்வையாளர் அரங்கு மூடப்பட்டது. அந்த பார்வையாளர் அரங்கு எந்தவித வெளிநபருக்காகவும் திறக்கப்படவில்லை.
தங்களது நெருங்கிய உறவினர்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்துவர அனுமதியளிக்குமாறு கடந்த பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட 80 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயரிடம் எழுத்துமூலம் கோரியிருந்தனர்.
இதற்கமைய, கொவிட்-19 தடுப்பூசி அட்டைகளை பரிசோதித்து அதற்கான அனுமதியை வழங்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.