கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும்!


கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும் என ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் சரித ஹேரத் இன்று (08) பாராளுமன்றத்தில் முன்மொழிந்தார்.


இத்தாலியில் உள்ள பீட்சா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஹாம்பர்கர்கள் போன்ற பிற நாடுகளின் பூர்வீக உணவுகளுடன் கொத்து ரொட்டியினை ஒத்ததாக மாற்றுவதற்கு இலங்கை செயல்பட முடியும் என்று அவர் கூறினார். 


கொத்து ரொட்டி மட்டக்களப்பிலிருந்து தோன்றியதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கலாநிதி ஹேரத், தற்போது அதில் ஐஸ்கிரீம் கொத்து உட்பட பல வகைகள் இருப்பதாகத் தெரிவித்தார்.


இலங்கையின் பூர்வீக உணவுகளுக்கான காப்புரிமையை பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவித்த அவர், அபிவிருத்தியடைந்த நாடுகளுடனான வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கான வழிமுறையாக இதனைப் பயன்படுத்த முடியும் என்றார்.


இதன் மூலம் நாட்டின் ஏற்றுமதித் துறையை மேம்படுத்துவதுடன், இலங்கைக்கு சாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தும் எனவும் கலாநிதி ஹேரத் மேலும் சுட்டிக்காட்டினார்.  (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.