சிங்கள புத்தாண்டின் போது மேற்கொள்ளப்படும் பயணங்கள் தொடர்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குற்றவாளிகள் தகவல்களை எடுத்துக்கொண்டு சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
இதுபோன்ற தகவல்களை சமூக வலைதளங்களில் சேர்ப்பதால் குற்றச்செயல்களில் பலியாக நேரிடும் என்றும் அவர் கூறினார்.
எனவே, இவ்விடயத்தில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். (யாழ் நியூஸ்)