திட்டமிடப்பட்ட மின்துண்டிப்பு மேலும் பல மணித்தியாலங்களுக்கு நீடிக்கக்கூடும் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (30) நள்ளிரவை தாண்டியும் நாளை அதிகாலை வரை மேலும் பல மணிநேரத்துக்கு இந்த மின்துண்டிப்பு தொடரக்கூடும் என குறித்த தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இதேவேளை, தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமை மற்றும் வறட்சியான காலநிலை என்பன காரணமாக, நாளாந்த மின் தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலநேரம், எதிர்காலத்தில், மின்துண்டிப்பு நேர அட்டவணைக்குப் பதிலாக மின்விநியோக நேர அட்டவணையை வெளியிடுவது இலகுவானதாக இருக்கும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்தார்.
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளவும். https://chat.whatsapp.com/H57lBYDLpJ5Lq7gmNXcqNU