கடந்த 6 நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள டீசல் மற்றும் ஜெட் எரிபொருள் கொண்ட கப்பலை விடுவிக்க தேவையான 42 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
வங்கிகளில் இருந்து தேவையான பணத்தை அமைச்சகத்தால் பெற முடியவில்லை என்று கூறிய அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஒல்கா, குறிப்பிட்ட தொகையை ஏற்பாடு செய்ய பல நாட்கள் தேவை என்று வங்கிகள் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
திங்கட்கிழமைக்குள் தேவையான பணத்தை அமைச்சு ஏற்பாடு செய்ய முடியும் என்றும் எரிபொருளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
20,000 மெட்ரிக் டொன் டீசல் மற்றும் 20,000 மெட்ரிக் டொன் ஜெட் எரிபொருளைக் கொண்ட கப்பலை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்காக ஒரு நாளைக்கு 19,000 அமெரிக்க டொலர்கள் அபராத கட்டணமாக செலுத்தப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேவைப்பட்டால் தனியார் வங்கிகளிடமிருந்து தேவையான பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி எரிசக்தி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
இது தொடர்பாக நேற்று முக்கிய தனியார் வங்கிகளுடன் அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தியது, ஆனால் அந்த வங்கிகளால் இன்னும் கூறப்பட்ட டொலர் தொகையை வழங்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
டீசல் தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், இலங்கையில் தற்போது போதியளவு பெற்றோல் கையிருப்பில் இருப்பதாக திரு. ஒல்கா மேலும் தெரிவித்தார்.
முன்னதாக இரண்டு நாட்களுக்கு போதுமான டீசல் விநியோகிக்கப்பட்டது ஆனால் மூன்று மணி நேரத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துவிட்டதாகக் கூறிய அவர், இது ஒரு பாரிய பிரச்சினையாக இருப்பதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மார்ச் 21 ஆம் திகதி வரை இலங்கை போதுமான டீசல் வசம் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
டீசலுடன் கூடிய மற்றுமொரு கப்பல் நாளை (20) இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)