முச்சக்கர வண்டியில் வந்த குறித்த நபர் மூன்று கேன்களுக்கு எரிபொருளை பெற்றதுடன், அதில் இரண்டு கேன்களை முச்சக்கரவண்டியில் வைத்துவிட்டு மூன்றாவது கேனை எடுப்பதற்காக சென்றுள்ளார். இவ்வாறு மூன்றாவது கேனை எடுத்துச் செல்லும்போது அவர் கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து, அங்குப் பாதுகாப்புக் கடமையில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அவரை மீட்டு மீரிகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் மீரிகம பகுதியைச் சேர்ந்த 76 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை நேற்று (20) கடவத்தையில் அமைந்துள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு வயோதிபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கண்டி, யட்டிநுவர வீதியில் நேற்றுமுன்தினம் (19) மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்றிருந்த 71 வயதுடைய நபர் ஒருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.