அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் உணவை சமைக்க போதுமான எரிவாயு இல்லாததால் ஆபத்தான நிலை இருப்பதாகவும், மருத்துவமனைகளில் தற்போதுள்ள ஒரு வாரத்திற்கு போதுமான எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே இருப்பதாகவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றத்தின் (GMOA) தலைவர் டாக்டர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
மருத்துவமனைகளில் ஏற்படக்கூடிய இந்தப் பிரச்சினைக்கு சுகாதார அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சில மருத்துவமனைகள் ஏற்கனவே விறகுகளை வைத்து சமைக்க ஆரம்பித்துள்ளதாக அவர் கூறினார்.
அண்மைக் காலமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நோயாளர்களுக்கு விறகில் சமைத்த உணவு வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)