சந்தையில் தரமற்ற உறைந்த உணவுகளை விற்பனை செய்த 387 விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நுகர்வோரிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் கடந்த இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
உபுல் ரோஹன மேலும் தெரிவிக்கையில், மேலதிக விசாரணைகளின் பின்னர் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக குளிர்சாதனப் பெட்டிகளுக்குள் சேமிக்கப்படும் உணவின் தரம் மோசமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தையில் உறைந்த உணவுகளை வாங்கும் போது நுகர்வோர் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த வாரங்களில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக குளிர்சாதனப் பெட்டிகளில் சேமிக்கப்படும் இறைச்சி மற்றும் பால் பொருட்களின் தரம் முக்கியமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)