நாட்டில் எதிர்வரும் நாட்களில் தூர பிரதேச தனியார் பேருந்து சேவையினையும் ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் வரை தனியார் பேருந்து சேவை இவ்வாறு மட்டுப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் தீவிரமடைந்துள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவையாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.
தற்போது, 20 சதவீதமான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படுகிறது.
தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டண அதிகரிப்பு எரிபொருள் விலையினை முகாமைத்துவம் செய்யும் வகையில் அமையாது.
சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுமாறு ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது, ஆயினும் அது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக காணப்படுகிறது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிபோக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை.
ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வு காணும் வரை தனியார் பேருந்து சேவைக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கு பிரத்தியேக நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.