சர்வ கட்சி மாநாட்டின் போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வழங்க மறுத்த அறிக்கை அம்பலம் - முழு அறிக்கையும் இதோ!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்வ கட்சி மாநாட்டின் போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வழங்க மறுத்த அறிக்கை அம்பலம் - முழு அறிக்கையும் இதோ!


சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தொடர்பான தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் கொரோனா தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

சுற்றுலா வருவாய் இழப்பு மற்றும் நாடு மூடப்பட்டதால் இவ்வாறான கடுமையான நிலையை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று, இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கும் அதிகமான நிதிப் பற்றாக்குறையைக் கொண்டுள்ளதுடன், இலங்கையின் பொதுக் கடன் கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 119 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளதுடன் ஒற்றை இலக்க பணவீக்கத்தை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை.

கடந்த சர்வகட்சி மாநாட்டின் அறிக்கை தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சர்ச்சை எழுந்தது.

இந்த அறிக்கை ஒரு வரைவு மட்டுமே எனவும், இலங்கை அரசாங்கம் இதனை சவாலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் எனவே அதனை வழங்க முடியாது எனவும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முழு அறிக்கையையும் பதிவிறக்கம் செய்ய இங்கே க்லிக் செய்யவும்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.