நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன அனுமதிப்பத்திரத்தை மீள ஒப்படைக்க அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆளும்கட்சி பின்வரிசை உறுப்பினர்கள் குழுவுடன் இணைந்த அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா நெருக்கடி மற்றும் அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக நாட்டைப் பாதித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வரியற்ற வாகன உரிமங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)