இன்று (24) எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாகவும், பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகளில் வரிசைகள் காணப்பட்டதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன் பகுதிக்கு பல தினங்களின் பின்னர் எரிவாயு லொறி ஒன்று வந்துள்ளதால் எரிவாயு விநியோகத்தின் போது கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த சூழ்நிலையானது சம்பந்தப்பட்ட விற்பனை நிலையத்தால் பெறப்பட்ட எரிவாயுவின் ஒரு பகுதியை உணவகங்களுக்கு வழங்குவதுடன் ஏற்பட்டது.
ஹட்டன் கொட்டகலை எரிவாயு விற்பனை நிலையத்தில் எரிவாயு விநியோகிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் ஹட்டன் கொட்டகலை வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் அம்பலாங்கொட கந்தேகொட பிரதேச சபை மைதானத்திற்கு இன்று எரிவாயு லொறி ஒன்று வந்துள்ளதுடன் அதனை விநியோகிக்கும் போது கடும் சூடுபிடித்த நிலை ஏற்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)