நாளை (14) சுமார் 7 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, A,B,C,D,E,F வலயங்களில் மதியம் 1.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 5 மணி நேரமும், இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை 2 மணி நேரமும் மின்வெட்டு ஏற்படும்.
G,H,I,J,K,L போன்ற வலயங்களில் காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை 5 மணி நேரமும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 2 மணி நேரமும் மின்வெட்டு ஏற்படும்.
மேலும் T,U,V,W போன்ற வலயங்களில் காலை 5.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை 5 மணி நேரமும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 2 மணி நேரமும், P,Q,R,S போன்ற வலயங்களில் பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 5 மணி நேரம் மற்றும் இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை 2 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)