இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல எமது செய்திச் சேவைக்கு இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும், இந்திய அரசாங்கத்தின் பிரமுகர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் எரிபொருளுக்கான தொகையை 750 மில்லியன் டொலராக அதிகரிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.