பெற்றோரிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த சிறுமி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெற்றோரிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த சிறுமி!


பெற்றோரால் தனக்கு இடையூறு ஏற்படுவதாக சிறுமியொருவர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.


யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு பாடசாலை சீருடையுடன் அச்சுவேலி காவல் நிலையத்தில் இன்று தஞ்சம் அடைந்துள்ளார்.


தனது தந்தை மதுபோதையில் வந்து தாயாருடன் தினமும் வாக்குவாதத்திலும் சண்டையிலும் ஈடுபடுவதாகவும் தெரிவித்த குறித்த சிறுமி தந்தையின் சித்திரவதையைப் பொறுக்கமுடியாமல் இன்றையதினம் காவல்நிலையத்தை நாடியதாக தெரிவித்துள்ளார்.


தஞ்சமடைந்த குறித்த சிறுமியை கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைக்க அச்சுவேலி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.


இச் சிறுமி வீட்டின் மூத்த பிள்ளை எனவும் அவருக்கு இரண்டு சகோதரர்கள் இருப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.