நாடு முழுவதிலும் உள்ள அனைத்து CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இன்று இலங்கை இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முறையான எரிபொருள் விநியோகத்தை மேற்பார்வையிட இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.
எரிபொருள், குறிப்பாக டீசல் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக அரசாங்கத்தினால் தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருளைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த முதியவர்கள் இதுவரை தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
கிளர்ந்தெழுந்த நுகர்வோர், எரிபொருள் கொட்டகை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் பல எரிபொருள் நிலையங்களில் பதற்றமான சூழ்நிலைகளும் பதிவாகியுள்ளன.
நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் எரிபொருளைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)