அதுருகிரியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இருந்து எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வந்த நபர் ஒருவர் தனது வேனிலேயே உயிரிழந்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துருகிரிய, போரே பகுதியைச் சேர்ந்த 85 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றுமுன்தினம் (26) இடம்பெற்றுள்ளது
சிறிது நேரம் ஆகியும் வாகனம் சம்பவ இடத்திலிருந்து அகற்றப்படாமல் இருந்ததாகவும், அப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த போது, வாகனத்தில் வந்தவர் படுத்திருப்பதை பார்த்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இறந்தவரின் உறவினர்களை அழைத்துப் பேசியபோது, இறந்தவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீஸாரிடம் தெரிவித்தனர்.
சம்பவத்தின் போது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நெரிசல் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)