இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசட்சுகு அசகாவா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் இலங்கையின் செயற்திட்டங்கள் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் தலைவர் சுட்டிக்காட்டினார்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மற்றும் தனியார் துறை தொழில் முனைவோர் அபிவிருத்திக்கு உதவுவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பின் போது, கொவிட் தொற்றுநோய் பாதிப்பை குறைப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி மற்றும் நிதி உதவிகளை வழங்கியமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை பாராட்டினார். (யாழ் நியூஸ்)