55 வருடங்களுக்கு பின்னர் கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் சர்வதேச விமானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

55 வருடங்களுக்கு பின்னர் கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் சர்வதேச விமானம்!

இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 55 வருடங்களின் பின்னர் இன்று தொடக்கம் மீண்டும் தனது சர்வதேச விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதலாவது விமானம் இன்று காலை 8.40 இற்கு மாலைதீவில் இருந்து இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்தது. மாலத்தீவின் தேசிய விமான சேவையான MaldivianAero விமானம் வருகை தந்தது. இதற்கு water cannon salute கொடுத்து வரவேற்கப்பட்டது.

இலங்கைக்கும் மாலத்தீவிற்கும் இடையில் 50 இருக்கைகள் கொண்ட Dash-8 விமானம் பயன்படுத்தப்படும், வாரத்திற்கு மூன்று முறை திட்டமிடப்பட்ட விமானங்களை இயக்கப்படும் மற்றும் மே 2022 முதல் அதன் ஐந்து விமானங்களாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுக்கும் இங்கிருந்து விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படும்.

நிகழ்வில் உமர் அப்துல் ரசாக் – மாலைதீவுக் குடியரசின் தூதுவர், ஏ.எம்.ஜே. சாதிக் - மாலைதீவுக்கான இலங்கைத் தூதுவர் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பிரசன்ன ரணதுங்க - சுற்றுலா அமைச்சர், டி.வி.சானக - விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலயங்களின் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மற்றும் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ. சந்திரசிறி, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் தலைவர், திருமதி டெய்ட்ரே டி லிவேரா உள்நாட்டு மற்றும் பிராந்திய விமான நிலையங்களுக்கான AASL இயக்குனர் CIAR/JIA / BTIA & CATD, AASL இன் இயக்குநர்கள் குழு மற்றும் CAASL, AASL மற்றும் மூத்த அதிகாரிகள் மற்ற பங்குதாரர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இலங்கையின் தனியார் விமான நிறுவனமான பிட்ஸ் ஏர் நிறுவனமும் மாலைதீவு விமான சேவை நிறுவனமும் இணைந்து தமது சேவைகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறைந்த செலவிலான விமான பயணங்களை மேற்கொள்ள சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான நிதியை சிவில் விமான சேவைகள் அதிகார சபை, விமான நிலையம் மற்றும் ஏவியேஷன் நிறுவனம் முதலீடு செய்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.