50 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்த பிரதமர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

50 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்த பிரதமர்!


யாழ். ஸ்ரீ நாகவிகாரையில் பிரதமர் மஹிந்த ராஜபக் க்ஷ அவர்கள் இன்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது, அந்த பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 50 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களையும் பிரதமர் வழங்கி வைத்தார்.


இலங்கை இராணுவத்தின் ஒருங்கிணைப்புடன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அதற்கு அனுசரணை வழங்கியது.


இந்த நிகழ்வில் - இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, 51 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க உள்ளிட்ட இராணுவத்தினர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.