கடவத்தை 9 ஆம் மைல் பகுதிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
அறிக்கை தமிழில்
24.03.2022 அன்று இரவு கடவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – கண்டி வீதியில் மஹர 09 ஆம் மைல்கல் இற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் டி56 ரக துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் கிரிபத்கொட வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 30 மற்றும் 31 வயதுடைய பேலியகொட பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சடலங்கள் கிரிபத்கொட வைத்தியசாலையிலும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊடகப் பேச்சாளர் அலுவலகம்,
பொலிஸ் ஊடகப் பிரிவு