கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும், நாட்டின் முதலாவது சனத்தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பை முன்னிட்டும் 20 ரூபா பெறுமதியான புதிய நினைவு நாணயம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சந்திரிகா எல். விஜேரத்ன மற்றும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.பி. அனுரகுமார இன்று (21) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நினைவு நாணயங்களை வழங்கி வைத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நாணயம் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மூலம் புழக்கத்தில் விடப்படும் என்றும், தற்போது புழக்கத்தில் உள்ள மற்றைய நாணய குற்றிகள் மற்றும் தாள்களுடன் பணம் செலுத்துவதற்கு முடியும் என்றும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.