மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படலாம் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிலக்கரி இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை எரிபொருளை இறக்குமதி செய்ய பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டால், மின் உற்பத்தி நிலையங்களில் தினமும் 15 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் இதுவரை நாட்டிலேயே மிக நீண்ட மின்வெட்டு அதுவாக அமையும்.
அதேநேரம், ஏப்ரல் மாத இறுதிக்குள் நிலக்கரி இறக்குமதியை ஆரம்பிக்காவிட்டால் அடுத்த சீசனில் எந்த நிலக்கரி கப்பலையும் இலங்கைக்கு கொண்டு வர முடியாது.
எனவே, அடுத்த சில வாரங்களுக்குள் நிலக்கரியை இறக்குமதி செய்வது கட்டாயம் என்றும், இல்லையெனில் பல நாட்கள் நாடு இருளில் மூழ்கும் நிலை ஏற்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. (யாழ் நியூஸ்)