சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் குன்மிங்கில் இருந்து, குவாங்சோவுக்கு 123 பயணிகள் உட்பட 133 பேரை ஏற்றிக் கொண்டு ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனத்தின் விமானம் இன்று புறப்பட்டது. விமானம் குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைப் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மலை மீது மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பெரும் தீ விபத்து எற்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்றுள்ளனர்.
இதற்கிடையே விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வானத்தில் இருந்து விமானம் கீழே விழும் வீடியோ காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 133 பயணிகளுடன் சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
🔴 Le Boeing 737-800 de China Eastern s’est écrasé en pleine montagne avec 133 personnes à bord. pic.twitter.com/qFtWVR17TZ
— air plus news (@airplusnews) March 21, 2022
Crash site pic.twitter.com/8qJWYK8FhS
— ChinaAviationReview (@ChinaAvReview) March 21, 2022