இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) டீசல் லீற்றர் ஒன்றிற்கு ரூ. 120 நட்டம் ஏற்பட்டுள்ள போதிலும், எரிபொருள் விலை ரூ. 55 இனால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக அதிகரித்துள்ள எரிபொருள் விலையேற்றமானது பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தையே ஈடுகட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், டீசல் இழப்பை ஈடுகட்ட, ரூ. 120 ஆக லிட்டர் ஒன்றின் விலையை உயர்த்த வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
தொடர்ந்தும் பழைய விலையில் எரிபொருளை வர்த்தகம் செய்திருந்தால் இம்மாதம் 26 பில்லியன் ரூபா நட்டத்தை CPC சந்தித்திருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)