கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த 12 கோடி ரூபா பெறுமதியான 6 கிலோகிராம் தங்கத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளம்பிட்டி பகுதியை சேர்ந்த 38 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் (40) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.