பேராதனை - சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரிடம் இருந்து, இவர் 5,000 ரூபாவை லஞ்சமாக பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பொதுச் சுகாதார பரிசோதகர் பிலிமத்தலாவ பிரதேசத்தில் வசிப்பவராவார்.
வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளரிடம் இருந்து இவர் அவ்வப்போது பணம் பெற்றுள்ளமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.