PUCSL இன் புதிய வழிமுறையின் காரணமாக திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் விதிக்கப்படாது என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் புதிய வழிமுறைகள் வகுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மின்வெட்டை அமுல்படுத்துவது உடனடியானது என ஜனக ரத்நாயக்க இன்று (15) முற்பகல் எச்சரித்துள்ளார்.
மேலும் அதற்கான பொறிமுறையை நாளடைவில் அறிவிக்கப்படும் என்றார்.
இதேவேளை, களனிதிஸ்ஸ சொஜிட்ஸ் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையும் தெரிவித்திருந்தது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ஆலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் இலங்கை மின்சார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.