சுற்றுச்சூழலை அழிக்கும் கொள்ளையர்களையும், அதற்கு துணைபோகும் அரசியல்வாதிகளையும் புரிந்து கொண்டு அவர்களிடமிருந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு கண்டி ரோயல் மோல்ஹோட்டலில் இன்று (02) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தம்மை அர்ப்பணித்த மக்களைக் கௌரவிக்கும் வகையில், Eco Kandy Nature Club மூலம் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்துரையாற்றிய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
இந்த நாடு சூரிய ஒளி, கடல்கள், வனவிலங்குகள், ஆறுகள் மற்றும் நீரோடைகள் நிறைந்த அழகான பூங்காவாக உள்ளது. சுற்றுச்சூழலியலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க பெரும் முயற்சி செய்கிறார்கள். நமது தாய்நாடு முழுவதும் பல்லுயிர் பெருக்கத்தின் சிறந்த பூங்காவாகும். சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை மெத்தனப் போக்கிற்கு இடமில்லை. உலகில் பல நாடுகள் சுற்றுச்சூழலைப் பற்றி பேசும்போது எப்போதும் எங்கும்கிடைக்காத வளங்கள் எங்களிடம் உள்ளது.
உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் மனித உயிர்களை அழித்து பட்டினி கிடக்கும் போது போர்களுக்காக பெரும் தொகையை செலவிடுகின்றனர். அந்த அனைத்து சக்திகளின் சவால்களையும் எதிர்கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் ஜனாதிபதி ஆவதற்கு முன், 2006-2007 வரை சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தேன். நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் என்னை ஆட்சிக்குக் கொண்டு வந்தவர்கள், ஜனாதிபதி பதவிக்கு மேலதிகமாக என்ன ? அமைச்சுப் பதவியை வகிக்க விரும்புகின்றேன் என என்னிடம் கேட்டனர்.
பொதுவாகபெரும்பாலான ஜனாதிபதிகள் நிதி மற்றும் வர்த்தக அமைச்சகங்கள் உட்பட அமைச்சகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.
ஆனால் நான், எனக்கு சுற்றாடல் மற்றும் மகாவலி அமைச்சு வேண்டும் என்றேன். அரசியல்வாதிகளின் பலத்தாலும், அரசு அதிகாரிகளின் தலையீட்டாலும் இந்த நாட்டின் சுற்றுச்சூழலை கொள்ளையடிக்கும் தொழிலதிபர்கள் அழித்து வருவதை நான் முன்பே பார்த்திருக்கிறேன். எனவே, நான் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் சுற்றாடல் மற்றும் மகாவலி அமைச்சுக்கள் என் கீழ் வைக்கப்பட்டன.
மேலும்நான்ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சுற்றாடல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த 65 வர்த்தமானி அறிவித்தல்களில் ஒரே நாளில் கையொப்பமிட்டிருந்த போதிலும் அவற்றில் சில இன்னும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படாதது துரதிஷ்டவசமானது.
-எம்.ஏ. அமீனுல்லா